×

முடிவைத்தானேந்தலில் திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை, பிப். 6: புதுக்கோட்டை அடுத்த முடிவைத்தானேந்தலில் நடந்த திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் புதுக்கோட்டை அடுத்த முடிவைத்தானேந்தலில் திமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள், கட்சி முன்னணியினர், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணியினர் என திரளானோர் பங்கேற்றனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறுவதற்கான உத்திகளை விளக்கிப் பேசினார்.

Tags : consultation meeting ,DMK Bhut Committee ,
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...